சித்தாண்டியில் ஆர்ப்பாட்டம்.

| 0 commentaires |
| 0 commentaires |
| 0 commentaires |
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் பதவி அளிப்பதற்கு பிரி ட்டன், பிரான்ஸ் நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. ஜி-20 உச்சி மாநாடு கனடாவின் டொரண்டோ நகரில் நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்பத ற்காக பிரதமர் மன்மோகன் சிங் டொரண்டோ வந்துள்ளார். மாநாட்டையொட்டி சனிக்கிழமை இரவு நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரிட்டனின் புதிய பிரதமர் டேவிட் கேமரூன், பிரான்ஸ் அதிபர் நிக் கோலஸ் சர்கோஸி ஆகியோரை பிரதமர் மன்மோகன் சிங் சந்தித்துப் பேசினார். ஜுலையில் பிரிட்டன் பிரதமர் இந்தியா வருகை : பிரிட்டனின் பிரதமராக கேமரூன் பதவியேற்ற பிறகு அவரை பிரதமர் மன்மோகன் சிங் இப்போது தான் முதல் தடவையாக சந்தித்துள்ளார். மேலும் இந்தியாவுக்கு வருமாறு கேமரூனுக்கு அழைப்பு விடுத்தார் பிரதமர். பிரதமரின் அழைப்பை ஏற்று ஜுலையில் இந்தியா வருவ தாக கேமரூன் உறுதி அளித்துள்ளார். உயர் கல்வி பயில்வதற்காக கூடுதல் எண்ணிக்கையில் இந்திய மாண வர்கள் பிரிட்டன் வரவேண்டும் என்று பிரதமர் கேமரூன் அழைப்பு விடுத்தார். பின்னர் இருவரும் ஜி 20 உச்சி மாநாடு குறித்து தங்களது கருத்துகளை பரிமாறிக் கொண் டனர். ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் பதவி அளிப்பது தொடர்பாக பிரிட்டன் ஆதரவு அளிக்கும் என்று அப்போது மன் மோகன் சிங்கிடம் கேமரூன் உறுதி அளித்தார். பின்னர் பிரான்ஸ் ஜனாதிபதி நிக்கோலஸ் சர்கோஸியை, பிரதமர் மன்மோகன் சிங் சந்தித்துப் பேசி னார். அதிபர் சர்கோஸி, அவரது மனைவி கர்லா புரூனி ஆகியோர் மீண்டும் இந்தியாவுக்கு வர வேண்டும் என்று பிரதமர் மன் மோகன் சிங் அழைப்பு விடுத்தார். ஜி 20 உச்சி மாநாடு மட்டுமல்லா மல், உலக விவகாரங்களில் இந்தியா முக்கியமான பங்கை ஆற்ற வேண்டும் என்று பிரான்ஸ் விரும்புவதாக பிரதமர் மன்மோகன் சிங்கிடம் சர்கோஸி தெரிவித்தார். ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் பதவியைப் பெற்றுத் தர பிரான்ஸ் ஆதரவு அளிக்கும் என்றார் அவர். இந்தியாவுடன் வர்த்தகத்தில் ஈடுபட்டிருக்கும் ஐரோப்பிய நாடுகளில் பிரான்ஸ் 5 வது இடத்தைப் பிடித்துள்ளது குறிப்பிட த்தக்கது. |
| 0 commentaires |
| 0 commentaires |
| 0 commentaires |
| 0 commentaires |
| 0 commentaires |
| 0 commentaires |
| 0 commentaires |
| 0 commentaires |
வெளிவிவகார அமைச்சில் இன்று காலை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். ஐக்கிய நாடுகள் சபையானது இலங்கை விடயத்தில் மேற்கொண்டுள்ள தலையீடானது விடயங்களை சிக்கலாக்கக் கூடியதுடன் எதிர்மறை விளைவுகளையே கொண்டுவரும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். இங்கு அமைச்சர் ஜிஎல் பீரிஸ் மேலும் கருத்து வெளியிடுகையில், "தற்போது ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர்நாயகம் நியமித்துள்ள ஆலோசனைக் குழுவானது முன்னர் பேசப்பட்ட விடயத்திலிருந்தும் மாறுபட்ட ஒன்றாகும். ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை உட்படப் பலர் கோரி வந்த விசாரணைக் குழுவிலிருந்து தற்போதைய குழு மாறுபட்டுள்ளது. விசாரணை நடத்துவது குறித்து தமக்கு எவ்வித எண்ணமுமில்லை என ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் சார்பாக பேசவல்ல அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். இது ஆலோசனைக்குழு, மாறாக உண்மைகளை தேடிக் கண்டறியும் குழுவல்ல, இது செயலாளர் நாயகத்திற்கு ஆலோசனைகளை மட்டுமே வழங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் நாம் இந்த நியமனத்தை வன்மையாக நிராகரிக்கின்றோம். இது எந்த வகையிலும் உதவக்கூடியதோ காலத்திற்குகந்ததோ அல்ல. நாம் எமது நாட்டில் படிப்பினைகளைக் கற்பதற்கும் நல்லிணக்கத்திற்குமான ஆணைக்குழுவை நியமித்துள்ளோம். அந்தக் குழுவிலுள்ளவர்கள் தகைமையுடையவர்கள். அனைத்து விடயங்கள் தொடர்பாகவும் விசாரணைகளை நடத்துவதற்கு அதிகாரம் கொண்டவர்கள். அப்படியிருக்கும் போது, அந்த ஆணைக்குழுவின் செயற்பாடுகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் ஐநாவின் குழு நியமனத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. இது துரதிஷ்டவசமானது; பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது; எதிர்மறையான விளைவுகளையே இது ஏற்படுத்தும்" என்றார். பின்விளைவுகளை ஏற்படுத்தும் எனக்குறிப்பிட்டீர்களே.... எவ்வாறான பின்விளைவுகள் என தெளிவுபடுத்த முடியுமா என ஊடகவியலாளர் ஒருவர் வினவியபோது, "மக்களின் உணர்வுகள் இதனுடன் தொடர்புபட்டுள்ளன. இது தேவையற்ற தலையீடு என மக்கள் உணர்கின்றனர். எவ்வாறாயினும் இந்தக் குழுவில் உள்ளவர்கள் இலங்கைக்கு வர அனுமதிக்கப்பட மாட்டார்கள்" என அமைச்சர் குறிப்பிட்டதுடன் தற்போதைய நிலையில் இது தேவையற்றதெனவும் சுட்டிக்காட்டினார். ___ | ||||
|
| 0 commentaires |
இது தொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சர் விநாயக மூர்த்தி முரளிதரன் கூறுகையில், "பாசிக்குடா பகுதி அபிவிருத்தி செய்யப்பட இருக்கிறது. பாசிக்குடா பகுதியில் அரச தரப்பில் அமைக்கப்படும் முதலாவது ஹோட்டல் இது. 5 வருடங்களில் இதனூடாக 10,000 பேர் வரை வேலைவாய்ப்பைப் பெறக்கூடியதாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. இங்கு பாடசாலைகள், மற்றும் பொது கட்டிடங்கள் என்பனவும் அமைக்கப்படவுள்ளன" என்றார். கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுறை சந்திரகாந்தன் கருத்து தெரிவிக்கையில், "கிழக்கு மாகாணம் என்பது சுற்றுலாத்துறைக்கு முக்கிய வாய்ந்தது. எனவே சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்யும் நோக்கில் பாசிக்குடா பகுதியில் ஹோட்டலுக்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. அந்த வகையில் எதிர்காலத்தில் பாசிக்குடா பிரதேசம் வெளிநாட்டு மக்களைக் கவரும் ஒரு பிரதேசமாக மாறும் என்பதில் ஐயமில்லை.இது கிழக்கு மாகாண மக்களுக்கு சுயதொழிலில் அபிவிருத்தியைக் காணக்கூடியதாகவும் அமையும்" என்றார். பசில் ராஜபக்ஷ "கிழக்கு மாகாணம் பல அரிய வளங்களைக் கொண்டது என்ற வகையில், பாசிக்குடா பகுதியில் முதன் முறையாக அரச தரப்பில் இவ்வாறான ஒரு ஹோட்டல் அமைக்கப்படுகிறது. தனியார் துறையினருடன் இணைந்து இந்த ஹோட்டலை அமைக்க சுற்றுலாத்துறை ஒத்துழைப்பு வழங்குகிறது. இதனால் 2500 இளைஞர் யுவதிகள் உடனடி வேலைவாய்ப்புப் பெறுவர் |
| 0 commentaires |
| 0 commentaires |
கனடாவில் நடபெறவுள்ள ஜி8 ஜி 20 மாநாட்டுக்காக அங்கு வரலாறு காணாத பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மொத்தம் 3 நாள்கள் இந்த மாநாடு ஆண்டாரியோ மற்றும் டொரண்டோ நகரங்களில் நடைபெறவுள்ளது. ஜூன் 25, 26ம் திகதிகளில் ஹன்ட்ஸ்வில் நகரிலும் ஜூன் 26, 27ம் திகதிகளில் டொரண்டோ நகரிலும் மாநாட்டை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஜி8 ஜி 20 மாநாடுகளுக்காக இரு நகரங்களிலும் வரலாறு காணாத அளவுக்குப் பலத்தபாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளதால் இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகெங்கிலுமிருந்து 150க்கும் மேற்பட்ட புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் கனடாவுக்கு வந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மாநாட்டின் போது அசம்பாவித சம்பவம் நடைபெறாமல் தடுப்பதற்காக இந்த நடவடிக்கைகளை கனடா அரசு மேற்கொண்டுள்ளது. பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:- மாநாடு நடைபெறும் வளாகத்தைச் சுற்றி 3 மீட்டர் உயரத்துக்கு வேலி அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கு 5 அடுக்கு பொலிஸ் பாதுகாப்பும் போடப்படவுள்ளது. ஒருங்கிணைந்த பாதுகாப்புப் படைகள் மூலம் டொரண்டோ, ஆன்டாரியோ நக ரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள் ளது. இந்தப் படையில் கனடா இராணுவம் கடற்படை விமானப்படை அதிகாரிகள் டொரண்டோ பொலிஸார் இடம் பெற்றுள்ளனர். கனடாவில் நடைபெறும் இந்த மாநாட்டுக்காக வரலாறு காணாத பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது என்றார் அவர். |
| 0 commentaires |
இலங்கையின் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் சம்பவங்கள் தொடர்பாக ஆலோசனை வழங்குவதற்காக ஐ.நா. செயலாளர் நாயகத்தினால் நிபுணர்கள் குழு நியமிக்கப்பட்டதை இலங்கை அரசாங்கம் வன்மையாகக் கண்டித்துள்ளது. இது தொடர்பாக வெளியுறவு அலுவல்கள் அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டமை இறைமையுள்ள ஒரு நாட்டின் விடயத்தில் தேவையற்றதும் கேட்டுக்கொள்ளப்படாததுமான தலையீடு என்று கூறப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, 30 வருடங்களுக்கு மேலாக இலங்கை பயங்கரவாதத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் புலிகள் இயக்க பயங்கரவாதிகளினால் நினைத்துப் பார்க்க முடியாத அளவு வன்முறைகளும் கொடூரமும் கட்டவிழ்த்து விடப்பட்டன. உலகின் மிகவும் கொடூரமான பயங்கரவாத அமைப்பாக அது விளங்கியது. நீண்ட கால மற்றும் சிரமமான போராட்டத்தின் பின் புலிப் பயங்கரவாதத்தை தோற்கடித்து அரசாங்கம் நாட்டை மீட்டெடுத்தது. தற்போது நாட்டையும் மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் கட்டியெழுப்பும் நடைமுறை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ‘நடந்த சம்பவங்களில் இருந்து பாடம் படிக்கும் நல்லிணக்க ஆணைக்குழு’ ஒன்றை விசாரணை சட்ட விதிகளின் கீழ் நியமித்துள்ளார். இலங்கை சட்டத்தின் கீழ் அமைக்கப்படக் கூடிய ஆகக் கூடிய நியதிச் சட்ட ஆணைக்குழுவாக இது அமைகிறது. இந்த ஆணைக்குழுவானது தேசிய ஒற்றுமைக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் என்று இலங்கை அரசாங்கம் நம்புகிறது. இலங்கை மனித உரிமைகளை தொடர்ந்து ஊக்குவித்தும், பாதுகாத்தும் வந்துள்ளது. இதனை ஐ.நா. போன்ற முறையான அமைப்புகளினால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருப்பதை இங்கு குறிப்பிடவேண்டும். இந்நிலையில் இலங்கையில் இடம்பெற்ற சம்பவங்கள் பற்றி ஆராய நிபுணர் குழு அமைக்க ப்பட்டமை இறைமையுள்ள ஒரு நாட்டின் விடயத்தில் தேவையற்றதும் கேட்டுக்கொள் ளப்படாததுமான தலையீடாகும். அத்துடன் இலங்கையில் இடம்பெறும் நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணை க்கு எதிரான தரப்பினர் இதன்மூலம் முறையற்ற வகையில் பயனடையவும் இதனால் வாய்ப்பு ஏற்படக் கூடும். கடந்த வருடம் மே மாதம் 23 ஆம் திகதி ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தபோது அந்த விஜயத்தின் இறுதியில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில்; இலங்கை அரசாங்கத்துக்கும் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற இராணுவ செயற்பாடுகளின்போது பாரிய அளவிலான சர்வதேச மனித உரிமை மீறல் குற்றங்கள் இழைக்கப்பட்டதாக எந்த குறிப்பும் இடம்பெறவில்லை என்பதையும் இலங்கை அரசாங்கம் இங்கு சுட்டிக்காட்டவிரும்புகிறது என்று வெளியுறவு அலுவல்கள் அமைச்சின் அறிக்கை கூறுகிறது. இதேவேளை மேற்படி நிபுணர் குழு அமைக்கப்பட்டமை தேவையற்றது என ஊடக மற்றும் தகவல்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கூறியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இலங்கை பலமான அரசியலமைப்புடன் கூடிய இறைமையுள்ள நாடாகும். அரசியலமைப்புப்படி நிறைவேற்று அதிகாரமும், மக்களால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்றத்தின் அதிகாரமும் கொண்ட ஜனநாயக நடைமுறை எமக்கு உள்ளது. அத்துடன் துடிப்புடன் இயங்கும் நீதித்துறையும் உள்ளது. நாட்டின் இறைமை மக்களில் தங்கியுள்ளதுடன் அவர்களது உரிமைகள் அரசியலமைப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளன என்று அமைச்சர் ரம்புக்வெல்ல கூறுகிறார். மோதல் தொடர்பான அனைத்து விடயங்களையும் ஆராயும் அதி காரத்துடன் கூடிய நல்லிணக்க ஆணைக்குழுவொன்றை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஏற்கனவே நியமித்துள்ளார். இந்நிலையில் அதற்கு சமாந்தரமாக ஒரு விசார ணையை ஐக்கிய நாடுகள் அமைப்பு நடத்த முற்படுவதானது இலங்கை அதன் தேசிய நல்லிணக்கத்தையும் நிரந்தர சமாதானத்தையும் ஏற் படுத்தும் முயற்சியின் ஒரு பகுதி யாக ஆரம்பித்துள்ள நடைமுறையை முன்கூட்டியே தீர்மானிக்கும் வகை யிலானதும் குறைத்து மதிப்பிடும் வகையிலானதுமாகும். அங்கத்துவ நாடொன்றின் விருப் பத்தை கவனத்திற்கொள்ளாது ஐக் கிய நாடுகள் அமைப்பின் செய லாளர் நாயகம் மூவர் கொண்ட நிபுணர் குழுவை நியமித்துள்ளார். தேவையான நடவடிக்கைகளை இலங்கை மேற்கொள்ள இது வழி வகுத்துள்ளது என்று அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கூறி யுள்ளதாக அரச தகவல் திணைக்கள அறிக்கையில் மேலும் கூறப் பட்டுள்ளது. |
| 0 commentaires |
| 0 commentaires |
| 0 commentaires |
| 0 commentaires |
| 0 commentaires |
| 0 commentaires |
![]() இந்தியா மட்டும் இன்றி பல்வேறு நாடுகளில் இருந்து மாநாட்டில் எராளமான தமிழ் அறிஞர்கள் கலந்து கொள்கின்றார்கள். 23ஆம் திகதி (புதன்கிழமை) காலை 10.30 மணிக்கு முதலமைச்சர் கருணாநிதி தலைமமையில் ஜனாதிபதி பிரதீபா பட்டீல் உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டை தொடங்கிவைக்கிறார். மாநாட்டில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் கருணாநிதி இன்று (திங்கட்கிழமை) காலை 11 மணிக்கு இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் கோவை செல்கிறார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. கோவை போய்ச் சேர்ந்ததும் மாநாட்டு நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்களுக்கு கருணாநிதி சென்று ஏற்பாடுகளை பார்வையிடுகிறார். முதலமைச்சர் கருணாநிதி கோவையில் ஒரு வாரம் தங்கி இருப்பார். மாநாட்டுக்காக கொடிசியா வளாகத்தின் முன்புறம் உள்ள மைதானத்தில் 80 ஆயிரம் பேர்அமரும் வகையில் பிரமாண்டமான பந்தல் அமைக்கப் பட்டுள்ளது. அரண்மனை போன்ற தோற்றத்தில் பனை ஓலை வேலைப்பாடுகளுடன் பந்தலின் நுழைவு வாயில் அமைக்கப்பட்டுள்ளது. பந்தலின் நடுப்பகுதி மன்னர்கள் காலத்து தர்பார் பண்டபம் போல் அழகுபடுத்தப்பட்டு இருக்கிறது. மாநாட்டு தொடக்க நிகழ்ச்சி நடைபெறும் இந்தப் பந்தலில் 6,400 சதுர அடி பரப்பளவில் மேடை அமைக்கப்பட்டுள்ளது. மேடையில் ஜனாதிபதி பிரதீபா பட்டீல், முதலமைச்சர் கருணாநிதி, கவர்னர் கர்ஜித்சிங் பர்னாலா உள்ளிட்ட தலைவர்கள, முக்கிய பிரமுகர்கள் ஓய்வு எடுப்பதற்காக தனித்தனி அறைகளும் கட்டப்பட்டுள்ளன. மாநாட்டையொட்டி சிற்ப வேலைப்பாடு கள், அழகிய நுழைவு வாயில்களுடன் கண்காட்சி அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. மாநாட்டின் முக்கிய அம்சமாக ஆய்வ ரங்கம் நடைபெறுகிறது. இதற்காக கொடிசியா ஹாலில் 21 ஆய்வரங்கங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. ஒவ்வொரு அரங்கிலும் தலா 120 பேர் அமரக்கூடிய வகையில் இடவசதி உள்ளது. 21 ஆய்வரங்கங்களுக்கும் தமிழ்ப் புலவர்களின் பெயர்கள் சூட்டப்பட்டு உள்ளன. முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் ஆய்வரங்கங்களின் தொடக்க விழா நடை பெறும் முகப்பரங்கம் 5 ஆயிரம் பேர் அமரக்கூடிய வகையில் அமைக்கப்பட்டு உள்ளது. இணையத்தளத்தில் தமிழ் பயன்பாடு பற்றி மாநாட்டுக்கு வரும் பார்வையாளர்கள், பொதுமக்கள் தெரிந்து கொள்வதற்காக தமிழ் இணைய கண் காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாநாட்டின் தொடக்க நாளன்று முக் கிய நிகழ்ச்சியான பேரணி நடைபெறுகிறது. பேரணியில் கொண்டு செல்வதற்காக இனியவை நாற்பது என்ற தலைப்பில் 40 அலங்கார ஊர்திகள் தயார் நிலையில் உள்ளன. உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டையொட்டி கோவை நகரமே விழாக்கோலம் பூண்டு உள்ளது. புதுப்பிக் கப்பட்ட சாலைகள் வண்ண ஓவியங்கள், கூடுதலான மின்விளக்கு வசதிகள் என்று கோவை நகரமே ஜொலிக்கிறது. தமிழகத்தில் அடுத்தடுத்து நடந்துள்ள ரயில் கவிழ்ப்பு முயற்சி சதிவேலைகளைத் தொடர்ந்து, உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்கு உச்சகட்ட பாதுகாப்பு அளிக் கப்படுகிறது. வெடிகுண்டு ஊடுருவலைத் தடுக்க, அதிநவீன தொழில் நுட்ப சாத னங்களுடன் 300 நிபுணர்கள், தமிழகம் முழுவதும் இருந்து கோவை வந்துள்ளனர். முக்கிய தகவல்கள், வெளிநாட்டு விருந் தினர் தங்குமிடங்கள், மாநாட்டு வளாகம் மற்றும் அலங்கார அணிவகுப்பில் பங் கேற்கும் வாகனங்களை முன்கூட்டியே வெடிகுண்டு சோதனைக்கு உட்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மாநாட்டு பாது காப்பு மற்றும் வாகன போக்குவரத்தை சீரமைக்கும் பணிக்காக 333 எஸ். பி.க் களைக் கொண்ட பாதுகாப்புப் படை ஏற் படுத்தப்பட்டுள்ளது. இவர்களின் தலை மையில் 10 ஆயிரம் பொலிஸார் மாநாட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர். |
| 0 commentaires |
| 0 commentaires |
| 0 commentaires |
![]() | ![]() |
கணவரைத் தேடும் உதா |
| 0 commentaires |
கடந்த 19.06.1990 அன்று சென்னையில் புலிகளால் படுகொலை செய்யப்பட்ட ஈ.பி.ஆர்.எல்.எப்.தலைவர் கே.பத்மநாபாவின் 20 ஆவது நினைவு தினதியாகிகள் தினமான இன்று இறந்த போராளிகளின் நினைவாக நினைவுத்தூபி திறக்கப்பட்டதுடன் இரங்கல் கூட்டமும் நடைபெற்றது. மட்டக்களப்பு ஈபிஆர்எல்எப் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வுகளில் ரி.எம்.வி.பி.கட்சின் செயலாளர் நாயகம் , மாகாண சபைஉறுப்பினர்கள், இறந்த போராளிகளின் உறவுகள் உட்பட பெரும் எண்ணிக்கையிலானோர் கலந்து கொண்டனா |
| 0 commentaires |
| 0 commentaires |
| 0 commentaires |
| 0 commentaires |
| 0 commentaires |
| 0 commentaires |
ஆப்கானிஸ்தானில் எண்ணற்ற கனிப்பொருட்கள் காணப்படுவதாகவும் இதன் பெறுமதிகள் ஒரு டிர்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமானதென்றும் அமெரிக்காவின் பாதுகாப்புத் தலைமைய கமான பென்டகன் அறிவித்துள்ளது. இக்கனிப் பொருட்கள் முறையாகப் பெயர்க்கப்பட்டு பாவனைக்கு வரும் பட்சத்தில் ஆப்கானை செல்வம் கொழிக்கும் நாடாக மாறும். எண்ணெய் வளத்தால் சவூதி அரேபியா பெறும் வருமானத்தை விடவும் கூடுதலான செல்வத்தை ஈட்டமுடியும் என பென்டகன் கூறியுள்ளதுடன் நீண்டகால யுத்தத்தால் சீரழிந்து போயுள்ள ஆப்கானின் புனருத்தாரணப்பணிகள், கல்வி, சுகாதாரம் அபிவிருத்தி போன்ற துறைகளில் இப்பணத்தைச் செலவிட முடியுமெனவும் பென்டகன் கூறியுள்ளது. தங்கம், செம்பு, வெள்ளி, பித்தளை, லதியம் உள்ளிட்ட பெறுமதியான கனிப் பொருட்கள் ஆப்கானிஸ்தானிலுள்ளதாக நம்பப்படுகிறது. ஆனால் இவை பெரும்பாலும் தலிபான்களின் செல்வாக்குள்ள பிரதேசங்களிலேயே காணப்படுகின்றன. இவை தலிபான்களின் கைவசம் செல்லுமாயின் அவர்கள் நிறையப் பணங்களைச் சம்பாதிப்பர். இது தலிபான்களின் இராணுவ பலத்தை அதிகரிக்கும். எனவே ஆப்கான் அமெரிக்க அரசுகள் இக்கனிப் பொருட்களை பெறுவதில் கூடிய கவனத்தை செலுத்தியுள்ளன. கடும் சண்டைக்குப் பின்னர் இந்நிலங்களைத் தலிபான்களிடமிருந்து மீட்ட பின்னரே இக்கனிப் பொருட்களைப் பெறமுடியும் எனக் கருதப்படுகின்றது. |
| 0 commentaires |
| 0 commentaires |
தங்களது கோரிக்கைகளை முன்வைத்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு மகஜரொன்றை அனுப்பி வைத்துள்ளனர். "இலங்கையிலுள்ள அனைத்துத் தமிழ் அரசியல் கைதிகள் சார்பாக கொழும்பு புதிய மகஸின் சிறைச்சாலைக் கைதிகள், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு அனுப்பி வைத்துள்ள மகஜரிலேயே இவ்வாறு கோரப்பட்டுள்ளது. அந்த மகஜரில் மேலும் குறிப்பிடப்பட்டள்ளதாவது : "ஜனாதிபதி அவர்களே ! நீண்டகாலமாக தடுத்துவைக்கப்பட்டுள்ள நாம் யுத்தம் முடிவடைந்து ஒரு வருடமாகியும் தொடர்ந்து சிறையில் வாடுகின்றோம். எமது விடுதலை தொடர்பாக எவ்வித கரிசனையும் காட்டப்படவில்லை. கடந்த மூன்று தசாப்தங்கள் நீடித்து வந்த யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்து, அனைத்து மக்களும் சமூக ஒற்றுமையுடனும் ஐக்கியத்துடனும் நற்பிரஜைகளாக வாழவேண்டும் என்பதே தங்களின் விருப்பமாகும். கிழக்கின் உதயம், வடக்கின் வசந்தம் போன்ற மனிதாபிமான செயற்பாடுகளைத் தங்களின் சிறந்த தலைமையில் நடத்தி வருகின்றீர்கள். நான்கு சுவர்களுக்குள் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்க முடியாமல் இருக்கும் நாமும் எதிர்காலத்தில் இந்த நாட்டின் நற்பிரஜைகளாக வாழவே விரும்புகின்றோம். எங்களுக்கு எப்போது வசந்தம் வீசும்? கடந்த காலங்களில் நீதி அமைச்சர் மற்றும் சட்டமா அதிபர், சமூகப் பெரியோர்கள், அரசியல்வாதிகள் எனப் பல்வேறு தரப்பினரும் எம் விடுதலையைத் துரிதப்படுத்துவதாக உறுதிமொழிகள் கூறியும் எவ்வித முன்னேற்றமோ, நன்மையோ இதுவரை ஏற்படவில்லை. "சிறுபான்மை இனம் என்ற ஒன்றில்லை; அனைவரும் இந்த நாட்டை நேசிக்கும் மக்களே..." என்று நீங்கள் கூறியுள்ளீர்கள். தமிழ் மக்கள் அனைவரும் இந்த நாட்டில் பயமின்றி சுதந்திரமாக வாழவேண்டும் என்பதே தங்களின் விருப்பமாகும். எனவே நீண்டகாலமாக இலங்கையில் உள்ள பல சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள எம் மீது கருணைகாட்டி எம் வாழ்வுக்கு வழிகாட்டுவீர்கள் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கின்றோம்." இவ்வாறு அந்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளது. ___ |
| 0 commentaires |
ஈரான், பாகிஸ்தான் அமைச்சர்கள் குழாயூடான எரிவாயு விநியோக ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுகின்றனர். |
| 0 commentaires |
| 0 commentaires |
| 0 commentaires |