9/03/2012

| |

கிழக்கு மாகாணத்தின் அடுத்த முதலமைச்சர் யார்? (பாகம்-02)

- அஸ்வின்மித்ரா 
மட்டக்களப்பு மாவட்டத்தின் விகிதாசாரப் பரம்பல் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததொன்றாகும். அதாவது இங்கிருக்கக் கூடிய தமிழர்களின் வாக்குப் பலம் ஏனைய இரண்டு மாவட்டங்களை விட மிக அதிகமானது. அதாவது இங்குள்ள மொத்த வாக்காளர்கள் 347099 ஆகும். இதில் தமிழ் வாக்காளர்கள் 266709 ஆகும். இது மொத்த வாக்காளர்களில் 75சதவீதமாகும். அதனடிப்படையில் மட்டு மாவட்டத்திலிருந்து 11 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர். இவர்கள் அனைவரும் தமிழ்இ முஸ்லிம் பிரதிநிதிகளாகவே அமைவார்கள். இதன் காரணமாகவே கடந்த மாகாண சபைத் தேர்தலில் மட்டக்களப்பிலிருந்து பெரும்பான்மை விருப்பு வாக்குகளைப் பெற்று தமிழர் ஒருவர் முதலமைச்சராக முடிந்தது. அதனால் முதலமைச்சருடைய கடந்த 04 வருடகால செயற்பாடுகளில் பெரும் பங்கினை அனுபவிக்கக் கூடிய வாய்ப்பு மட்டக்களப்பு மக்களுக்கே கிடைத்தது. இந்த அதிகார ருசியும் எதிர்வரும் தேர்தலில் மட்டக்களப்பு வாக்களிப்பு விகிதத்தில் பாரிய செல்வாக்கினைச் செலுத்தும் என்பது நிச்சயம்.

கடந்த முறை ஐக்கிய தேசியக் கட்சிஇ முஸ்லிம் காங்கிரஸ் ஆகியன இணைந்து இரண்டு தமிழ்இ இரண்டு முஸ்லிம் பிரதிநிதிகளைப் பெற்றிருந்த நிலையில் இரா.துரைரெட்ணம் சுயேட்சைக் குழுவூடாக வெற்றி பெற்றிருந்தார். ஏனைய 06 உறுப்பினர்களும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் இருந்து தெரிவானவர்கள். இதில் மூவர் முஸ்லிம் பிரதிநிதிகளாகவும் (அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ்,தேசியக் காங்கிரஸ்) ஏனைய மூவரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் சார்பாக தெரிவானார்கள். இந்த நிலையில் இம்முறை இரண்டாவது ஆட்சிகாலத்திற்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் காலந்தாழ்த்திய வரவு முக்கிய திருப்பு முனையாக அமைகின்றது.


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வரவினால் ஐக்கிய தேசியக் கட்சிக்கான தமிழ்ப் பிரதிநிதிகள் வெல்வதற்கான வாய்ப்புக்கள் மிகக் குறைவாக உள்ளன. ஏனெனில் பொதுவாக கடந்த முறை ஐக்கிய தேசியக் கட்சிக்குக் கிடைத்த வாக்குகள் அரச எதிர்ப்பு வாக்குகளாகவே அமைந்திருந்தன. இம்முறை அரச எதிர்ப்பு வாக்குகள் அனைத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினையே சென்றடையும். அது மட்டுமன்றி ஐக்கிய தேசியக் கட்சிக்குள் நிரந்தரமாகிவிட்ட உட்பூசல்களும்இ சரியான தலைமைத்துவம் இன்றித் தள்ளாடுகின்ற நிலைமையும்இ தேசிய அளவில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவுத் தளத்தினை ஆட்டம் காணச் செய்துள்ளது. அதிலும் குறிப்பாக சென்ற முறை முழுமையான ஜனநாயகச் சூழல் ஏற்பட்டு விடாத நிலையிலும் வடக்கில் புலிகள் அழிந்து விடாத உயிராபத்தை எதிர் கொள்ளும் சூழலுக்கு மத்தியிலும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை நேரடியாக இறங்கிப் பிரச்சாரங்களில் ஈடுபட்டது ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் உயர்மட்டக் குழுவினர் மூன்று மாவட்டங்களிலும் ஒரு சில நாட்கள் தங்கி நின்று ஐக்கிய தேசியக் கட்சிக்காக உழைத்தனர். ஆனால் இம்முறை ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர்களுக்கு தேசிய பிரச்சாரப் பலம் கட்சியிடமிருந்து கிடைக்கவில்லை. இதனை ஐக்கிய தேசியக் கட்சியின் திட்டமிட்ட ஒதுக்குதலாகவும் கருத வாய்ப்புண்டு. எனவே இது போன்ற பல காரணிகள் ஐக்கிய தேசியக் கட்சியிடமிருந்து இம்முறை தமிழ்ப் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படப் போவதில்லை என முன்னறிவித்து விட்டன.   


இந்த நிலையில் தனித்து இறங்கியுள்ள முஸ்லிம் காங்கிரஸ் அரசுக்கு எதிரான பிரச்சாரத்தில் ஈடுபட முடியாத தயக்க நிலையிலேயே செயற்படுகின்றது. மத்திய அரசில் இன்று வரை அமைச்சரவை அந்தஸ்திலுள்ள நீதியமைச்சர் ரவூப்ஹக்கீம் இரு தோணிகளில் கால் வைத்த நிலையில் உள்ளார். அரசிலிருந்து வெளியேறினாலும் அமைச்சரவையில் ஒட்டிக் கொண்டிருக்கின்ற அவரது செயற்பாடு,முஸ்லிம் காங்கிரஸை உறுதியான தனிவழி என்கின்ற பிரச்சார மாயையை உருவாக்க முடியாத நிலைக்கு தள்ளி விட்டுள்ளது. அது மட்டுமன்றிப் பிரதியமைச்சரும் காங்கிரஸின் இரண்டாம் தலைமையுமான பஸீர்சேகுதாவூத் தனது பிரதியமைச்சர் பதவியை தூக்கி வீசி விட்டு கட்சித் தலைமைக்குள் இருந்த முரண்பாடுகளை அம்பலப்படுத்தியுள்ளார். இதன் காரணமாக முஸ்லிம் காங்கிரஸினுடைய நிரந்தர வாக்கு வங்கி பலத்த ஆட்டங்கண்டுள்ளது. இந்த நிலையில் சென்ற முறை அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸில் இருந்து மாகாண சபை உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டு கடந்த வருடம் கட்சி மாறி இம்முறை முஸ்லிம் காங்கிரஸில் போட்டியிடுகின்ற வாழைச்சேனை ஜவாஹிர்சாலியின் சொந்த வாக்கு வங்கி மட்டுமே முஸ்லிம் காங்கிரஸின் ஒரே பலமாக உள்ளது. காத்தான்குடியில் இருந்து முஸ்லிம் காங்கிரஸில் போட்டியிடுகின்ற நகரசபை உறுப்பினராகிய சல்மாஹம்சா (ஹிஸ்புல்லாஹ்வின் சகோதரி) குறிப்பிடத்தக்க வாக்குகளைப் பெறுவாராயினும் வெற்றி வாய்ப்புக்கான சாத்தியமில்லை. இந்த நிலையில் முஸ்லிம் காங்கிரஸின் ஏனைய வாக்காளர்களைப் பற்றி அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. எனவே முஸ்லிம் காங்கிரஸ் இம்முறை மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரேயொரு ஆசனத்தை மட்டுமே தக்க வைத்துக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த நிலையில் 13 கட்சிகளும் 21 சுயேட்சைக் குழுக்களும் மட்டக்களப்பு மாவட்டத்தில் களமிறங்கியுள்ளன. ஈரோஸ்இ ஜேவிபிஇ நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் போன்றவை பெயரளவில் அடையாளம் கொண்ட கட்சிகளாக இருந்தாலும் பிரதிநிதிகளைப் பெறுவதற்குரிய சந்தர்ப்பங்கள் நிச்சயமாக இல்லை. எனவே மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸிற்கு கிடைக்குமென எதிர்பார்க்கப்படும் ஒரு பிரதிநிதி தவிர ஏனைய 10 ஆசனங்களும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அடங்கிய ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்கும்இ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குமிடையே தான் பங்கிடப்படப் போகின்றன. இந்த நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டிருப்பவர்களது சொந்த செல்வாக்குஇ வாக்குப்பலம் போன்றவை மிகத் தாழ்வான நிலையிலேயே காணப்படுகின்றது. ஆனால் தமிழரசுக் கட்சி மீதான அபிமானமும்இ வீட்டுச் சின்னத்தின் மீதான மாயையும் மட்டுமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு கைகொடுக்கக் கூடும். அத்தோடு தமிழ் ஊடகங்களின் ஒரு பக்கச் சார்பான பரப்புரைகள்இ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் வெற்றி வாய்ப்பில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

வேட்பாளர்களைப் பொறுத்த வரையில் துரைராஜசிங்கம்இ நடராஜா ஆகிய இருவரையும் தவிர மற்றைய அனைவரும் கடந்தகால ஆயுதப் போராட்ட அமைப்புக்களில் இருந்து வந்தவர்கள் என்பதோடு பலவிதமான கொலைஇ கொள்ளை நடவடிக்கைகளில் பகிரங்கமாகவே ஈடுபட்ட கறைபடிந்த வரலாற்றுக்குச் சொந்தக்காரர்கள். இந்தக் கடந்தகால நினைவுகளெல்லாம் மக்களால் இன்று மீள நினைவு கொள்ளப்பட்டு வருகின்றன. அது மட்டுமன்றி தனது சொந்த மனைவியை கோரமாகப் படுகொலை செய்து சிறைவாசம் அனுபவித்து சித்த சுவாதீனம் அற்றவர் எனச் சான்றிதழ் சமர்ப்பித்து 04 வருட சிறைவாசத்தோடு தப்பித்துக் கொண்ட ஒருவரும் கூட்டமைப்பு வேட்பாளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளமை மட்டக்களப்பு மக்களை கடும் விசனமடையச் செய்துள்ளது. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினரின்  பிரச்சாரங்களில் மாதர் அணியினர் மேற்படி வேட்பாளருக்கெதிரான கடுமையான கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

அத்தோடு வாகரைப் பிரதேசத்தில் இருந்து போட்டியிடுகின்ற கூட்டமைப்பு வேட்பாளர் அவுஸ்திரேலியா ஆட்கடத்தல் விவகாரத்தில் மிகப் பகிரங்கமாகவே ஈடுபடுகின்றமை வாகரைப் பிரதேசவாசிகள் இடத்தில் பரகசியமான ஒன்று. இது போன்ற பல காரணிகள் கூட்டமைப்பினுடைய வீட்டுச் சின்னத்தின் மீதான மாயையைப் பலவீனப்படுத்தி வருகின்றன. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளுக்கு எதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர். காலாஇ காலமாக எடுத்து வீசுகின்ற பிள்ளையான்குழுஇ ஆயுதக்குழு துருப்புச் சீட்டுக்கள் எல்லாம் இத் தேர்தலில் கூட்டமைப்பினருக்கு கைகொடுக்கப் போவதில்லை.

ரெலோ சார்பில் போட்டியிடுகின்ற பிரசன்னா ரெலோ அலுவலகத்தை பொட்டம்மானுடைய உளவுத்துறையின் இரகசிய மையமாக மாற்றி புலிகள் இயக்கத்தின் கிழக்குபிளவு நிகழ்ந்த போது இடம் பெற்ற ராஜன் சத்தியமூர்த்திஇ தொழினுட்ப கல்லூரி அதிபர் தில்லைநாதன் ஆகியோரது படுகொலைகளுக்கு பின்னணியாக இருந்து செயற்பட்ட குற்றச்சாட்டுக்களின் சொந்தக்காரர்.

வேட்பாளர் பட்டியலில் இடம் பெறுகின்ற மாற்று இயக்க வேட்பாளர்களில் ஜனா (TELO),செல்வா (PLOTE) போன்றோரை விட துரைரெட்ணத்திற்கு (EPRLF) ஆயுதப் போராட்டக் கால விமர்சனங்களைத் தாண்டியஇ ஆயுதப் போராட்டகால தொடர்ச்சியில் அவரது ஜனநாயக அரசியல் வேலைத்திட்டங்கள் ஒரு சிறு நல் அபிப்பிராயத்தையேனும் ஏற்படுத்தியிருப்பது உண்மை.

இந்த நிலையில் கூட்டமைப்பினரது பிரச்சார உத்திகளின் செறிவற்ற தன்மையானது மக்களிடையே கூட்டமைப்பு மீதான நீண்டகால நம்பிக்கைகளை தளரச் செய்து வருகிறது.

தொடரும்----! நன்றி  தேனீ