
வித்தியாலய,தேசிய கொடிகள் ஏற்றப்பட்டு, புதிதாக அமைக்கப்படவிருந்த புதிய கட்டடத்திற்கான அடிகல் நாட்டப்பட்டது.
| |
| |
| |
| |
| |
| |
1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில் காத்தான்குடி பகுதியில் உள்ள சுமார் நூற்றுக்கணக்கான முஸ்லிம் மக்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் கடத்தி செல்லப்பட்டு விடுதலைபுலிகள் இயக்கத்தினரால் கொலை செய்யப்பட்டு குருக்கள்மடம் பகுதயில் கடற்கரை ஓரமாக புதைக்கப்பட்டிருப்பதாக ஒருவரால் களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்கமைய பொலிஸாரால் நீதிமன்றத்திற்கு அறியப்படுத்தியதை அடுத்து குறித்த இடத்தை அகழ்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இதற்கமைய 2014, ஏழாம் மாதம் முதலாம் திகதி குருக்கள் மடம் பகுதியிலுள்ள குறித்த இடத்தின் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்படும். இந்த விடயம் தொடர்பில் காணாமல் போனோர் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவினர் இந்தப் பகுதியில் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.
| |
| |
| |
| |
| |
| |
| |
பேருவளை,அளுத்கமவில் பௌத்த துறவிகளுக்கும் இஸ்லாமிய சகோதரர்களுக்கும் இடையே ஆரம்பமான கலவரங்கள்கண்டிக்கத்தக்கன.இந்த வன்முறைகள் நாட்டின் ஏனைய பகுதிகளுக்கு பரவாமலும் இது இனக்கலவரமாக மாற்றம் பெறவும் அனுமதிக்கக் கூடாது எனவும் அரச இயந்திரங்களும், பொலிசாரும் தலையிட்டு நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும் எனவும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிட்ப்பட்டுள்ளது.
மூன்று தசாப்தங்களாக புரையோடிப்போன யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு நிலைமையை சீர்படுத்த முனையும் வேளையில் மீண்டும் ஒரு இன முறுகள் ஏற்படுவதனையும் ஓர் இனம் இன்னும் ஓர் இனத்தினை அடிமைப்படுத்தி ஆள முற்படுவதனையும் ஒரு போதும் அனுமதிக்க முடியாது.
இலங்கை பிரஜைகள் எவரும் நாட்டின் அனைத்துவித சுதந்திரத்துடனும், தனித்துவத்துடனும் வாழ்வதற்கு பூரணதகுதி உடையவர்கள். ஒருவரை இன்னும் ஒருவர் ஏளனம் செய்தோ அல்லது ஒருவரை இன்னும் ஒருவர் தாழ்வுக்கண் கொண்டு நோக்குவதோ, அரசியல் அதிகாரத்தின் மூலம் அடக்கி ஆள்வதோ நீண்ட காலம் நோக்கிய அபிவிருத்தி பாதைக்கு அசௌகரியத்தினையே ஏற்படுத்தும் என்பது கடந்தகால வரலாற்றில் இருந்து நாம் கற்றுக்கொண்டபாடமாகும்.
ஓவ்வொரு மதத்தர்மங்களும் மனிதனை மனிதனாக மதிக்கும் உயரிய தத்துவத்தினையே கொண்டுள்ளது. அந்தவகையில் மனித தத்துவத்திற்கு மதிப்பளித்து அனைவரும் தமது தனித்துவத்துடன் கௌரவமாக வாழ்வதற்கான சூழலை உருவாக்கிக் கொடுக்க வேண்டியது காலத்தின் தேவையாகும். என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
| |
| |
| |
| |
| |
| |
| |
| |