
சாதாரண பொதுமக்களின் அன்றாட பாவனைக்ககான யாழ் பஸ் நிலையம் பயணிகளினதும் ஏனையவர்களின் கவனத்திற்குரியதாக மாற்றப்பட்டதும் யாழ் பொது நூலகம் 1954 பங்குனி 29 சாம் சபாபதி அவர்களினால் அடிக்கல் நாட்டப்பட்டு அரைகுறை நிலையில் இருந்ததை 1959ல் தனது இளம் வயதில் யாழ் மேயராக வந்ததும் இந்தியாவிலிருந்து சிற்பக் கலைஞர்களை அழைத்து அந்நூல் நிலையத்தை ஆசியாவின் சிறந்த நூல் நிலையமாக மாற்றியமைத்த பெருமை அல்பிரெட் துரையப்பா அவர்களுக்கே உரியது. இந்நூல் நிலையத்தை பொது மக்களின் பாவனைக்கு மேயர் துரையப்பா அவர்கள் 1959 ஐப்பசி 11ல் பொதுமக்கள் பாவனைக்காக திறந்து வைத்தார். 1960,1966,1970,1975ம் ஆண்டுவரை மக்கள் மேயர் என்ற நாமத்துடன் துரையப்பா திகழ்ந்து வந்தார். இக்காலங்களில்தான் யாழ்ப்பாண
மாநகரசபைக்கான கட்டிடம்,யாழ் திறந்தவெளி அரங்கு,துரையப்பா விளையாட்டரங்கு, (விளையாட்டரங்கின் காணியின் ஒரு பகுதி திரு துரையப்பா குடும்பத்தினருக்குச் சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது) யாழ்ப்பாண நவீன சந்தை,நல்லூர்க் கல்யாண மண்டபம், யாழ் நகர்த்தில் ஒற்றை வழிப் பாதைகளை இரு வழிப்பாதைகளாக்கியதும்,யாழ் நகரை அழகுபடுத்தியத்குடன்,தமிழ் வளர்த்த பெரியார்களுக்கும் புலவர்களுக்கும் சிலை வைத்து அழகு பார்த்ததையும்,யாழ்ப்பாணத்திற்கு ஒரு பல்கலைக்கழகம் வேண்டும் என்று உறுதியாக நின்று அந்தப் பல்கலைக்கழகம் உருவாகக் காரணமானவர்களில் துரையப்பாவும் ஒருவர்.அத்தோடு 1974ல் பல்கலைக்கழகத் திறப்புவிழாவை சிறப்பாக நிறைவுசெய்து யாழ் முற்றவெளி மைதானத்தில் பகிரங்கக் கூட்டமொன்றை ஏற்பாடு செய்து இலங்கையின் அன்றைய பிரதமர் பண்டாரநாயக்கா உட்பட 22 அமைச்சர்களை அழைத்து பிரமாண்டமான கூட்டத்தை நடாத்தியதுடன் அன்றைய காலகட்டங்களில் அன்றைய அரசுக்கு எதிராக பயங்கரவாதச் செயற்பாடுகளில் ஈடுபட்ட சில தமிழ் இளைஞர்களை தடுத்து வைத்திருப்பதை அவர்களின் எதிர்கால நலனில் பாதிப்பு ஏற்படாமல் இருக்க அவர்களை விடுதலை செய்ய வேண்டுமென்று பிரதமர் சிறீமாவோ பண்டாரநாயக்கவிடம் மகஜரைக் கையளித்து அவர்களை விடுதலை செய்யும்படி பகிரங்கமாகக் கேட்டுக்கொண்டார்.


