10/03/2012

| |

ஹெரோயின் கடத்திய பெண்ணுக்கு மரண தண்டனை

கடந்த நவம்பர் 2002 காலப்பகுதியில் ஹெரோயின் கடத்தி விற்பனை செய்ததாக குற்றச்சாட்டின் பேரில் கைதான பெண்ணொருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.  
மேல் நீதிமன்ற நீதிபதி பிரீத்தி பத்மன் சூரசேன, குற்றஞ்சாட்டப்பட்ட தம்மிகா சுவர்ணமாலி என்பவரும் மரண தண்டனை விதித்தார். 
இவரை கெத்தாராம விளையாட்டிரங்கின் முன்னால் வைத்து பொலிஸார் கைது செய்தனர். அத்துடன் அவரிடமிருந்து 3.8 கிராம் போதைப்பொருள் மீட்கப்பட்டதுடன் அவரது வீட்டை சோதனையிட்ட போது 7 பொலித்தீன் பைகளிலிருந்து ஹெரோயின் போதைப்பொருள் கண்டெடுக்கப்பட்டது என பொலிஸ் தரப்பினால் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.