
யுத்த காலத்தில் வன்னியில் இருந்து மீட்கப்பட்ட பொதுமக்கள் கடந்த இரு மாதங்களாக வவுனியா அகதிமுகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். இம்மக்களை விடுவிக்குமாறு கிழக்கு மாகாண முதலமைச்சர் கௌரவ சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களால் அதிமேதகு ஜனாதிபதியிடமும் கௌரவ பசில் ராஜபக்ஷவிடமும் விடுக்கப்பட்ட வேண்டுகோள்களுக்கிணங்க இன்று சுமார் 1380 கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த மக்கள் கிழக்கு மாகாண முதலமைச்சரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இதேபொன்று யாழ்பாணத்தை சேர்ந்த சில குடும்பங்களும் விடுவிக்கப்பட்டன. மேலும் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்கள் படிப்படியாக விடுவிக்கப்படுவார்கள் என கௌரவ பசில் ராஜபக்ஷ அவர்களினால் முதலமைச்சரிடம் உறுதியளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் அமைச்சர்கள், மாகாண அமைச்சர்கள் அமைச்சின் செயலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்
0 commentaires :
Post a Comment