நகரையும், நகரை அண்டிய பகுதியினையும் மாத்திரம் பெரிதும் மையப்படுத்தி அபிவத்திருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதுடன், மைதானங்களையும், போட்டிகளையும் கிராமத்தினை நோக்கி நகர்த்துவதனை இட்டு நகரைச் சூழவே ஒருங்கிணைந்து நடைமுறைஙப்படுத்துவதும், பதிவு செய்யப்படாத விளையாட்டுக் கழகங்களுக்கும், செயற்பாடில்லாத பெரும்பாலான விளையாட்டுக் கழகங்களுக்கும் நிதி ஒதுக்கீடுகள் வழங்குவதனை நிறுத்தி இலைமறைகாய்களாக உள்ள கிராமப்புற இளைஞர்களுக்கும் திறமையாக செயற்படுகின்ற இளைஞர் விளையாட்டுக் கழகங்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படவேண்டுடிய சிந்தனையினை ஜசோதாவின் வெற்றி அதிகாரிகளுக்கும், சமூகத் தலைவர்களுக்கும் ஏற்படுத்தி உள்ளது என்பதில் எந்த ஐயமும் இல்லை என கௌரவ முதலமைச்சரின் இணைப்புச் செயலாளரும், இளைஞர் அபிவிருத்தி அமைப்பின் தலைவருமான பூ.பிரசாந்தன் குறிப்பிட்டார்.
தேசிய ரீதியில் பங்குபற்றியுள்ளோம் என்பதை உறுதிப்படுத்துவது மட்டும் போதும் என்ற இலக்குடன் செயற்பட்ட விளையாட்டுத்துறைக்கு புதிய திருப்புமுனை வரலாற்றின் நிகழ்வு சாதனையினை மட்டக்களப்பு மாவட்ட இளைஞர்கள் ஏற்படுத்தியுள்ளார்கள். இதனை உணர்ந்து அனைவரும் சேவைசெய்ய முன்வரவேண்டும் எனவும் குறிப்பிட்டார். தேசிய இளைஞர் விளையாட்டு விழாவில் பதுளையில் 02 தங்கம், 02 வெள்ளி பதக்கம், 04 வெண்கலப் பதக்கம் வென்ற வீர வீராங்கனைகளை வரவேற்கும் நிகழ்வு தேசிய இளைஞர் சேவைகள் மன்ற கேட்போர் கூடத்தில் நடாத்தப்பட்ட போதே மேற்கண்டவாறு உரையாற்றினார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், மாற்று ஆடைக்கும், உணவுக்கும் ஏங்கித் தவிக்கும் எத்தனையோ இளைஞர் சமூகம் திறமைகளுடனும் வாடிக்கொண்டுதான் இன்னும் உள்ளது. இவர்களின் ஆதங்கங்களை உணர்ந்து கொண்டு அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் அரசியல் பேதங்களை மறந்து சேவை செய்ய முன்வரவேண்டும். விளையாட்டு வீரர்களுக்கு இலகுவில் தொழில் பெற்றுக்கொடுக்கவும் முன்வரவேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வில் மட்டக்களப்பில் இருந்து தேசிய போட்டியில் பங்குபற்றிய 50இற்கு மேற்பட்ட விளையாட்டு வீரர்களும், தேசிய இளைஞர் சேவைகள் மன்ற கிழக்கு மாகாண பணிப்பாளர் கே. தவராஜா, மாவட்ட விளையாட்டு உத்தியோகஸ்த்தர் ரி.ஈஸ்வரராஜா, ஏனைய இளைஞர் சேவை அதிகாரிகள், பாடசாலை மாணவர்கள், அதிபர், ஆசிரியர்கள் விளையாட்டு உத்தியோகஸ்த்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0 commentaires :
Post a Comment