8/07/2009

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பெயர் மாற்றப்படும்


இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்தவர்களினால் ஆரம்பிக்கப்டப்ட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் என்ற கட்சியின் பெயரை மாற்றப் போவதாக அக் கட்சியின்தலைவரும் கிழக்கு மாகாண முதலமைசச்ருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் கூறுகின்றார்.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள என்ற தமது கட்சியின் பெயரில் 'தமிழ் ' மற்றும்' புலிகள் ' ஆகிய இரண்டு சொற்களையும் நீக்கி விட உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.
தமது கட்சியின் உறுப்பினர்களினால் சமார் 32 புதிய பெயர்கள் முன் வைக்கப்பட்டுள்ள போதிலும் பொருத்தமான பெயரை எதிர் வரும் பேராளர் மகாநாட்டில் கூடி தெரிவு செய்து அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறுகின்றார்.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவனேசதுரை சந்திரகாந்தன் தமிழோசைக்கு அளித்த செவ்வியை செய்தியரங்கத்தில் கேட்கலாம்.


0 commentaires :

Post a Comment