9/10/2012

| |

கிழக்கு மாகாண மக்களை நட்டாற்றில்; விட்டுச் சென்ற த.தே.கூட்டமைப்பிற்கு முன்னாள் முதலமைச்சர் பகிரங்க சவால்


நடைபெற்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தலிலே இனவாதத்தினை கக்கி கிழக்கு தமிழ் மக்களின் வாக்குகளை சூறையாடிய தமிழ் தேசிய கூட்டமைப்பு, கிழக்கு மாகாண தமிழ் மக்களை நட்டாற்றில் விட்டுச் சென்றிருக்கிறது. தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இந்த தேர்தலிலே வடகிழக்கு இணைப்பு, சர்வதேசத்தின் பார்வை , இனவாதம் என கோசங்களை எழுப்பி தமிழ் மக்களின் அதிகப்படியான வாக்குளை சூறையாடி இருக்கின்றார்கள். இவர்களது கபடபேச்சுக்கு மதிப்பளித்து கிழக்கு தமிழ் மக்கள் இவர்களது கட்சிக்கு வாக்களித்து இருக்கின்றார்கள். இந்த வாக்களித்த மக்களை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு இவர்களையே சாரும். அதே வேளை முடிந்தால் 3 வருடங்களுக்குள் வடகிழக்கு இணைப்பு சர்வதேசத்தின் அங்கிகாரம் அல்லது சர்வதேசத்தின் தீர்ப்பு மற்றும் தேசியம் என்பவற்றை பெற்றுக் காட்ட வேண்டும். இல்லையாயில் உடனடியாக கிழக்கு தமிழ் மக்களை எங்களது பாதையில் செல்வதற்கு இடமளிக்க வேண்டும். ஏங்களது மக்களை நாங்களே ஆள்வோம் என முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.