
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பிரதிச் செயலாளர் ஜெ.ஜெயராஜ் அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இப் பிரச்சார நடவடிக்கையின் போது வாக்களிக்கும் விதம் பற்றி பரீட்சாத்தமாக விளக்கப்பட்டது.
ஒவ்வொரு தேர்தலிலும் உரிய விதத்தில் அளிக்கப்படாமல் பெருமளவான வாக்குகள் நிராகரிக்கப்படுகின்றன. எனவே இவ்வாறான விழிப்புணர்வுப் பிரச்சாரங்களை முன்னெடுப்பதன் மூலம் அந் நிலைமையினை வெகுவாகக் குறைக்க முடியும் என ஜெயராஜ் அவர்கள் கருத்துத் தெரிவித்தார்.