தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் இன்று இடம் பெற்ற மாவீரர் குடும்பங்களுடனான சந்திப்பில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சந்திரகாந்தன் அவர்கள் கலந்து கொண்டார். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பிரதிச் செயலாளர் ஜெ.ஜெயராஜ் அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இக் கூட்டத்தில் சந்திரகாந்தன் அவர்கள் போராளி குடும்பங்கள் அனைவருக்கும் கட்சி நிதியிலிருந்து நிதியுதவியினையும் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.