9/09/2012

| |

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி ஆதரவாளர்கள் மீது தாக்குதல்


நாசிவன்தீவு பிரதேசத்தில் வைத்து தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி ஆதரவாளர்கள் மீது தமிழ் தேசிய கூட்டமைப்பு காடையர்களினால் தாக்குதல் நடத்தபட்டிருக்கிறது.
இன்று காலை குறித்த பிரதேசத்தில் சென்று கொண்டிருந்த தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி ஆதரவாளர்களின் வாகனத்தினை திடீரென வழிமறித்த தமிழ் தேசிய கூட்டமைப்பு காடையர்கள் மிக மோசமாக தாக்கியதுடன், வாகனத்தில் இருந்தவர்களின் ஆவணங்கள் பலவற்றையும் கைப்பற்றி சென்றுள்ளனர். தாக்குதல் சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யபட்டமையினை தொடர்ந்து கந்தப்பன் சுரேஷ்குமார் (27), தவராஜா நிர்மலன் (30) ஆகிய இருவர் கைது செய்யப்பட்டதுடன் மற்றும் சிலர் பொலிசாரால் தேடப்பட்டு வருகின்றனர்.
இச் சம்பவத்தில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி ஆதரவாளர் ஒருவர் மோசமாக தலையில் தாக்கப்பட்டு காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.