பீட்டர் கெனமன், ஒரு மனிதாபிமானமிக்க அரசியல்வாதி. இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் தலைவரும் மனிதாபிமானியும், நேர்மையான அரசியல்வாதியுமான காலஞ்சென்ற பீட்டர் கெனமன் பிறந்த தினம் இன்றாகும். அவர் 1917 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 3ம் திகதி ஜஸ்டிஸ் ஆத்தர் கெனமனின் மகனாகப் பிறந்தார்.

பீட்டர் கெனமன் தனது ஆரம்பக் கல்வியை கொழும்பு றோயல் கல்லூரியிலும் உயர் கல்வியை லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திலும் வெற்றிகரமாக முடித்துக் கொண்டு இலங்கை அரசியலில் ஈடுபட்டார். குறிப்பாக அவர் லண்டனில் இருந்த காலத்தில் பல முற்போக்கு அரசியல் தலைவர்களின் நட்பையும் அன்பையும் சம்பாதித்துக் கொண்டார். அவர் மார்க்ஸிச சித்தாந்தத்தின் பால் ஈர்க்கப்பட்டு இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து செயற்பட்டார்.
அவரது 80 வருடகால வாழ்க்கையில் சுமார் 55 வருட காலத்தை சுதந்திரம், ஜனநாயகம், சோஷலிசம் என்பனவற்றுக்காக அர்ப்பணஞ் செய்தார். இன, மத, மொழி வேறுபாடின்றி எல்லாம் மனிதனுக்காக, மனிதனின் நன்மைக்காக என்ற கொள்கை யோடு செயற்பட்டார். இதனால் சகல மக்களாலும் தோழர் என அன்போடு அழைக்கப்பட்டார்.
கம்யூனிஸ்ட் கட்சியின் முழுநேர ஊழியராக இருந்ததோடு கட்சியின் தொழிற்சங்க நடவடிக்கைகளில் மும்முரமாக ஈடுபட்டார். மேலும் கட்சியின் வெகுஜன தாபனங்களையும் சக்திமயப்படுத்தினார். வர்க்கத்தின் உரிமைகளை வென்றெடுக்கவும் சாதாரண மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும் பாடுபட்டார். குறிப்பாக இந்நாட்டில் வாழும் சிறுபான்மை மக்களின் உரிமை களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார். சோஷலிசத்தின் மூலமே இந்நாட்டில் நாம் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம் என்பதில் அசை யாத நம்பிக்கை கொண்டிருந்தார்.
1947ம் ஆண்டு சோல்பரி அரசியல் யாப்பு அறிமுகப்படுத்தப் பட்டு முதன்முறையாக நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் பீட்டர் கெனமன் கொழும்பு மத்திய தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பல் இன மக்கள் வாழும் இப்பிரதேசத்தில் பிற்போக்கு இனவாதிகளை முறியடித்து வெற்றி கண்டமை பெரும் சாதனையாகும். 1947 - 1977 வரை சுமார் 30 வருடங்களில் மக்கள் பிரதிநிதியாக தொடர்ந்து வெற்றி பெற்றார்.
இவரது வெற்றியும் இலங்கையில் பிரதான தொகுதிகளில் கம்யூனிஸ்ட் கட்சி அடைந்த வெற்றிகளும் கம்யூனிஸ்ட் கட்சியை இலங்கை அரசியல் விவகாரங்களில் மிக முக்கியமான ஒரு சக்தியாக மாற்றியது.
1953 ஆம் ஆண்டில் இடம்பெற்ற ‘ஹர்த்தால்’ போராட்டத்தில் இவர் முக்கிய பங்கேற்றார். இது அரசியல் வரலாற்றில் முக்கிய திருப்பு முனையாக அமைந்தது எனலாம். இதன் பின்னால் நடைபெற்ற தேர்தலில் பீட்டர் கெனமன் மத்திய கொழும்பின் முதலாவது மந்திரியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பிற்போக்குவாத அரசியல் சக்திகளை முறியடிக்க முற்போக்குவாதிகளிடையே ஐக்கியத்தை உருவாக்க பாடுபட்டு அதில் வெற்றியும் கண்டார்.
அவர் ஆற்றிய சேவைகள் பாராளுமன்றத்தில் பங்குபற்றிய விவாதங்கள் என்பன இன்றும் நமக்கு நல்ல உதாரணங்களாகவும் படிப்பினையாகவும் அமைந்துள்ளன.
வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சராகயிருந்த போது (1970 - 1977) சாதாரண மக்களைக் கவனத்திற் கொண்டு உருவாக்கிய குறைந்த வாடகை வீடமைப்புத் திட்டம், மாடி வீட்டுத் தொகுதிகள் என்பன பிரதானமானவை. 1972 ஆம் ஆண்டு அவர் கொண்டு வந்த வீட்டு உச்ச வரம்புச் சட்டம், வாடகை உச்ச வரம்புச் சட்டம் என்பன சாதாரண மக்களால் வரவேற்கப்பட்டன. இச்சட்டத்தின் மூலம் பல்லாயிரக்கணக்கான ஏழை மக்கள் வீட்டுச் செந்தக்காரர்களாக மாறக்கூடிய வாய்ப்பு கிடைத்தது.
அது மாத்திரமல்லாது கொழும்பு பிரதேசத்தில் நீண்ட காலமாக கவனிப்பாரற்றுக் கிடந்த சிறுபான்மை இன மக்களின் குழந்தைகள் கல்வி கற்கும் பாடசாலைகளுக்கு மாடிக் கட்டடங்களையும் விஞ்ஞான ஆய்வு கூடங்களையும் பெற்றுக்கொடுத்தார். குறிப்பாக தொண்டர் த.வி., விவேகானந்த ம.வி., ஹோலிறோசரி வி., கொட்டாஞ்சேனை த.வி., வூல்வெண்டால் ம.வி., பாத்திமா மகளிர் ம.வி., ஹமீட் அல்-ஹுசைனி ம.வி., அல் நாஸர் ம.வி., அல் இக்பால், டி. பி. ஜாயா ம.வி., மிகுந்து மாவத்தை மு.ம. வித்தியாலங்களைக் கூறலாம்.
அவரது நீண்ட உரையில் தேசியம் மிளிரும், முற்போக்கு எண்ணங்கள் வெடிக்கும், ஹாஸ்யம் தவழும், தனது &8!{(88ளிலிருந்து வளைந்து கொடுக்காத நேர்மையான அரசியல்வாதி.
தமிழ், முஸ்லிம் மக்களின் அபிமானத்தையும் அன்பையும் பெற்றுக் கொண்ட சேவையாளர், ஏழை மக்களின் தலைவன் என அவரைப்பற்றி அடுக்கிக் கொண்டு போகலாம்.